உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு கரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடும் சந்தை பகுதிகளில் ஒலிபெருக்கி இணைத்த ஆட்டோவில் வரும் காவல்துறையினர், அங்கு கூடும் மக்களுக்கு கரோனா நோய் பாதிப்பு குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 : புதுச்சேரியில் நோ வரி - அமைச்சர் நமச்சிவாயம்!