கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் அருகே முகிலன் குடியிருப்பில் 150 வருடங்கள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசை, யாக சாலை, விக்னேஷ்வர பூஜை, வேள்வி பூஜைகளுடன் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானத்தை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பிரசன்ன பூஜை, ஆயிரத்து எட்டு விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களைப் பாடி விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர் முத்தாரம்மனுக்கு புதிய பட்டு உடுத்தி அலங்கார தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க: திருக்கார்த்திகைக்குத் தயாராகும் திருவண்ணாமலை கோயில் வாகனங்கள்!