மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனு - ஆட்சியரிடம் வழங்கிய குமரி மக்களவை உறுப்பினர்!