ETV Bharat / state

திருவட்டாறு பெருமாள் சிலையில் நடந்த தங்கச் சுரண்டல் - 16 பேருக்கு சிறைதண்டனை! - ஆதிகேசவ பெருமாள் கோயில் திருட்டு வழக்கில் 16 பேருக்கு சிறைதண்டனை

நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கு, 27 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் 16 பேருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 sentenced for 6 years
author img

By

Published : Sep 19, 2019, 10:55 PM IST

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது, குமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலாகும். சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 22 அடி நீளத்தில் பெருமாள் அனந்தசயன சிலையுள்ளது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோயிலில், 1974ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை அதாவது பத்தாண்டுகளாக பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் சிறிது சிறிதாக சுரண்டப்பட்டு வந்தது. இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ. 1 கோடியாகும். இந்நிலையில், கடந்த 1992ஆம் ஆண்டு, இத்திருட்டு குறித்து தெரிய வந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் பத்து பேர் வயது முதுமை காரணமாகவும், சிலர் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டதில் தற்போது 24 பேர் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீஅப்பன், கோபாலகிருஷ்ணன், கோபிநாதன், அப்புக்குட்டன், கிருஷ்ணம்மாள், குமார், முத்துகுமார், சுரேந்திரன், சுப்பிரமணியர், அய்யப்பன் ஆசாரி, ஆறுமுகம் ஆசாரி, அப்பாவு உள்ளிட்ட 16 பேருக்கு தலா ஆறாண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், கோபிநாதன்நாயருக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும், கோபாலகிருஷ்ணனுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், மற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஆதிகேசவ பெருமாள் கோயில் திருட்டு வழக்கில் 16 பேருக்கு சிறைதண்டனை

Intro:108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் 1984 மேலும் ஆண்டில் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 24 பேர் பெரும் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ்டியான் அறிவிப்பு. பரபரப்பு.Body:tn_knk_03_kovil_judjement_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் 1984 மேலும் ஆண்டில் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 24 பேர் பெரும் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ்டியான் அறிவிப்பு. பரபரப்பு.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில். இது சுமார் 1700 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் காணப்படுவார். சிலை முழுவதும் சுமார் 12 கிலோ தங்க தகடுகள் போதியபட்டிருந்தது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் 1984 மேலும் ஆண்டில் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்டது. தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியாமல் இருக்க இரும்பு தகடுகள் வெட்டி பொருத்தப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17-06-1992 ம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். 27 ஆண்டுகளாக நடந்த வழக்கில் 151 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் ஒரு பெண் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ்டியான் அறிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.