கன்னியாகுமரியில் உள்ள முருகன் குன்றம் அருள்மிகு வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, ஆகியவை நடைபெற்றன. பின்னர் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின் அலங்கார தீபாராதனை, அன்னதானம், ஆன்மிக உரை, சுவாமி அம்பாளுடன் கோயிலைச்சுற்றி வலம் வருதல் ஆகியன நடைபெற்றன. விழா நாள்களில் யாகசாலை பூஜை, அலங்கார தீபாராதனை, ஆன்மிக உரை, அன்னதானம், சுவாமி அம்பாளுடன் வலம் வருதல் ஆகியவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.