ETV Bharat / state

'ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் இல்லை, சாலை பணிக்கான ரூபாய் மூடக்கம்' - ஜிஎஸ்டி வரி

கன்னியாகுமரி: மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால், தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Vasanthakumar
Vasanthakumar
author img

By

Published : Jan 19, 2020, 10:53 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அலுவலர்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

வசந்தகுமார் பேட்டி

இதேபோன்று தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்காக 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. காரணம் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

மேலும், முத்ரா திட்டத்தின்கீழ் விஜய் மல்லையா போன்ற பல தொழிலதிபர்கள் பெற்ற 4 லட்சம் கோடி கடன் இதுவரை செலுத்தப்படவில்லை. இதனால் மத்திய அரசிடம் பணம் இல்லாததால் வங்கிகளில் மூலதனமாக இருக்கும் பத்திரங்களை மத்திய அரசு திருப்பிக் கேட்கிறது. இதனால்தான் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Intro:மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால் தமிழகத்தில், நான்கு வழி சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாயை முடக்கியுள்ளது என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Body:tn_knk_02_vasanthakumar_byte_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால் தமிழகத்தில், நான்கு வழி சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாயை முடக்கியுள்ளது என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார்  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்  அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அதிகாரிகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.

 இதேபோன்று தமிழக நான்கு வழி சாலைக பணிக்கான 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் தொகை மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது.  இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

மேலும், முத்ரா திட்டத்தின் கீழ் விஜய் மல்லையா போன்ற பல தொழில் அதிபர்கள்  பெற்ற 4 லட்சம் கோடி கடன் இதுவரை செலுத்தப்படவில்லை. இதனால் மத்திய அரசிடம் பணம் இல்லாததால் வங்கிகளில் மூலதனமாக இருக்கும்  பத்திரங்களை மத்திய அரசு திருப்பி கேட்கிறது. இதுதான்  இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.