கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிகுளம், மைலாடி, பூதப்பாண்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது.
இதனையடுத்து நரிகுளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணசிங் (55) என்பருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் இடிபாடில் சிக்கி நாசமாயின.
மேலும், வீடு இடிந்து விழும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்சஷ்டவசமாக உயிர்தப்பினர். மழையால் இடிந்து விழுந்த வீட்டை செப்பனிட அரசு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!