மகாத்மா காந்தியின் 152-வது பிறந்த நாள் விழா இன்று (அக்.2) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் காந்தி நினைவு மண்டபத்திற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த வோய்தேக் (29) என்பவர் தனது நண்பர் சுரேஷ் மற்றும் பெண்தோழியுடன் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இவர் போலந்து நாட்டில் பிஎச்டி., முடித்துள்ளார். அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதற்காக சென்ற 7 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் வந்து, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று தற்போது சரளமாக பேசவும் எழுதவும் கற்றுதேர்ந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "போலந்து நாட்டிலுள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்சொல்லி கொடுப்பதற்காக இங்கு வந்தேன். தற்போது தமிழில் பேசவும் எழுதவும் கற்றுகொண்டேன். இன்னும் விரைவில் சொந்த நாட்டிற்கு திரும்புவேன். எனக்கு தமிழ் மீதும் காந்தியடிகள் மீதும் உள்ள அளவு கடந்த அன்புகாரணமாக இன்று கன்னியாகுமரி வந்தேன். தமிழ்நாட்டு உணவான தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். தமிழ்நாட்டு பெண்களை மிகவும் பிடிக்கும். இங்குள்ள பெண்ணை திருமணம் செய்ய விருப்பம். எதிர்காலத்தில் என்னுடைய விருப்பம் நிறைவேறலாம்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எளிமையான வாழ்வுக்கு யாசகம் கேட்கிறேன்: ஆச்சரியம் கிளப்பும் நபர்