குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தை தமிழ்நாடு அளவில் புகழ் பெற்றது. ஓசூரு, பெங்களூரு, மதுரை, ராயகோட்டை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குமாரபுரம் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளிலிருந்தும் பூ வரத்து இருக்கும்.
அதேபோல், குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தோவாளை மலர் சந்தையிலிருந்து பூவை பூ வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். குறிப்பாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பூ கொண்டுசெல்லப்படும்.
இந்நிலையில் நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாலும் தோவாளை மலர் சந்தையில் இன்று (ஆகஸ்ட் 21) சிறப்பு மலர் விற்பனை சந்தை தொடங்கியது. பூ விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன் விவரங்களாவது:
பூக்கள் | கிலோ பூ- நேற்றைய விலை | கிலோ பூ- இன்றைய விலை |
---|---|---|
மல்லிகை | ரூ. 500 | ரூ. 1000 |
பிச்சி | ரூ. 300 | ரூ. 600 |
அரளி | ரூ. 150 | ரூ. 250 |
கேந்தி | ரூ. 40 | ரூ. 60 |
ரோஜா | ரூ. 150 | ரூ. 260 |
வாடாமல்லி | ரூ. 40 | ரூ. 80 |
அனைத்து வகையான பூவின் விலை உயர்ந்திருந்தாலும், பூவின் தேவையைக் கருத்தில்கொண்டு ஏராளமான பொதுமக்கள் பூவை வாங்கிச் செல்கிறார்கள். நல்ல வியாபாரம் நடைபெற்றுவருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜீவானந்தத்தின் 113ஆவது பிறந்த நாள் - மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்