கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர், தேங்காய்பட்டணம், கடியப்பட்டணம், மணக்குடி போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600 மீனவர்கள் ஈரான் ஆற்றிற்கு தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதால், ஈரான் நாடு குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக சொந்த ஊர் செல்லும்படி வலியுறுத்தியுள்ளது. ஈரானில் தனித்தனி தீவுகளில் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
இவர்களை உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நெய்தல் எழுச்சி பேரவை தலைவர் ஜான் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஈரான் நாட்டில் உள்ள தனித்தனி தீவுகளில் தங்கி வரும் அவர்களை கப்பல் மூலமாக அல்லது விமானம் மூலமாக உடனடியாக மீட்டு சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், தீவுகளில் தவித்து வரும் மீனவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தங்களது குமுறல்களை தெரிவிக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நடிகைக்கு செல்போனில் பாலியல் தொல்லை: 3 பேர் தலைமறைவு