கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தீ விபத்து, மழையால் பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற ஆபத்துகளில் இருந்து தங்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் தொடங்கி உள்ளன. இதில் முதற்கட்டமாக மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றனர்.
மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. கடல் சீற்றங்கள் மற்றும் ஆறுகளில் பெரு வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் சென்று சேர்வதற்கு முன் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருக்கும். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்புத் துறையினரோடு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து பேரிடர் பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக 15 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு, அதில் இருந்து மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றுள்ளனர். அப்போது மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனைப் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.இதையும் படிக்கவேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!