திரைப்பட இயக்குநரும் அதிமுக தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளருமான அன்பழகன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே முடிக்கப்பட்ட அரசு திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கவும், புதிய திட்டங்களை தொடங்கிவைக்கவும் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவும் நவம்பர் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் வருகையின்போது அரசுப் பணிகளை மாவட்ட ஆட்சியரும் கட்சிப் பணிகளை மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்பார்கள்.
2010ஆம் ஆண்டு நான் அதிமுகவில் இணைந்த போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட சாமி குறித்தும், நான் எடுத்த அய்யாவழி திரைப்படம் குறித்தும் கூறினேன்.
அதன்பின் அம்மா சுவாமிதோப்புக்கு வருகை தந்து அய்யா வைகுண்டரின் புகழை மேலும் பரப்புரை செய்வதற்கு காரணமாக இருந்தார். அதுபோல் எடப்பாடி பழனிசாமி இங்கு வரும்போது சுவாமிதோப்பு வந்து அய்யா வைகுண்டரை தரிசனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பேன்" என்றார்.