ETV Bharat / state

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் போராட்டம் - Kanyakumari District Latest News

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நூதன முறையில் அர்ச்சனை தட்டில் கோரிக்கை மனு வைத்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Mandaikadu temple
Mandaikadu temple
author img

By

Published : Jan 4, 2021, 8:25 AM IST

'பெண்களின் சபரிமலை' என வர்ணிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி செய்யாததால் கோயில் வளாகம் அசுத்தம் அடைந்துள்ளது. மேலும், இங்கு அர்ச்சனைக்குக் கொண்டு வரப்படும் பொருட்களை கோயில் ஊழியர்கள் மீண்டும் கடைகளில் விற்று, அவற்றை மீண்டும் மீண்டும் பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு வருவதாகவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதேபோல் இங்கு கோயிலுக்குள் கொண்டுவரப்படும் பன்னீரை கோயில் ஊழியர்கள் கடைகளில் விற்று, அங்கிருந்து மீண்டும் மீண்டும் பக்தர்கள் பன்னீர் வாங்கி கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்துக் கோயில் கூட்டமைப்பினர் பலமுறை கோயில் பிரச்னைகள் தொடர்பாக அறநிலையத் துறைக்கு மனு கொடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் நேற்று(ஜன.03) அர்ச்சனை தட்டில் மனுக்களை வைத்து கோயிலில் அளிக்கச் சென்றனர்.

ஆனால், அதை கோயிலில் பெற்றுக் கொள்ளாததால் கோயில் வாசலில் அமர்ந்து திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தித் தராத நிர்வாகத்தினர் மீது தண்டனை அளிக்க வேண்டும் எனவும், கோயில் வளாகத்தில் முறைகேடு செய்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பகவதி அம்மன் முன் அர்ச்சனை தட்டில் வைத்து மனு அளித்தனர்.

பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அலுவலர்கள் வந்து போராட்டக்குழுவினர் கூறிய குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்குப் பாதுகாப்பு - கமல் கருத்தால் சமூக வலைதளத்தில் வெடித்தது விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.