குமரி மாவட்டத்தில் நேற்று (ஜூலை24) வரை 73 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று 170 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மொத்த பாதிப்பு 3,566 ஆக உந்துள்ளது.
இதில் 2016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 33 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ளே ஒரு நகைகடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டு ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நகைகடையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு சுகாதரதுறையினர் பரிசோதனை செய்தனர். இதில் அந்த நகை கடையில் பணிபுரியும் மேலும் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து 10 பேரையும் ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் அனுமதித்தனர்.