ETV Bharat / state

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியா? - வசந்தகுமார் விளக்கம்! - நாங்குநேரி தொகுதி

சென்னை: "நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்" என்று, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

VASANTHA KUMAR
author img

By

Published : Jun 3, 2019, 11:08 PM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களை இன்று சென்னையில் சந்தித்தார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடபோவது யார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதைப்பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கூட்டணி கட்சியான திமுக ஆகியவை கூடி பேசி முடிவெடுப்பார்கள்" என்றார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதால் சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையலாம். பணபலம், படைபலத்தை வைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முறியடிப்பார்கள்" என பதிலளித்தார்.

வசந்த குமார்

இந்தி திணிப்பு குறித்து கேள்விக்கு, "இந்தி திணிப்பு மட்டுமன்றி எல்லா விவகாரத்திலும் தேவையில்லாத ஒன்றை திணித்து பிறகு பின் வாங்குவதுதான் பாஜகவின் வேலை. இந்தியை படிக்காதே என்று காங்கிரஸ் சொல்லவில்லை. இந்தியை திணிக்காதே என்று தான் சொல்கிறோம்" என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சி எம்.பி வசந்த குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து என் பயணத்தை தொடங்குகிறேன்.

குமரி மாவட்டம் ஏறத்தாழ 20 சதவிகிதம் மீனவர்கள் வசிக்கின்ற மாவட்டம். நாடாளுமன்ற ஆண்டு நிதி 5 கோடி ரூபாயில் 1 கோடி ரூபாயை மீனவர் நலனுக்கு பயன்படுத்தவுள்ளேன்.

கடந்த மே 2 ஆம் தேதி சின்னத்துரையை சார்ந்த 20 மீனவ சகோதரர்கள் கொச்சியிலிருந்து மீன் பிடிப்பதற்காக இரு படகுகளில் சென்றார்கள். அந்த இரண்டு படகுகளும் பழுதடைந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்தார்கள். இது குறித்து ஒரு மீனவர் தகவல் கொடுத்துள்ளார். இவர்களை மீட்ட வேண்டும் என்று பாரத பிரதமருக்கும், கடலோர காவல்படையினருக்கும் தகவல் கொடுத்தோம். அவர்களும் கொச்சியிலிருந்தும், மும்பையிலிருந்தும் தேடுவதாக கூறினாகள்.

பின்னர் அவர்களை மீட்டு பத்ரா என்கிற தீவில் பத்திரமாக வைத்துள்ளனர். இரு படகில் ஒன்று சரி செய்யப்பட்டுவிட்டது. மற்றொன்று சரி செய்யும் பணி மேற்கொண்டு வருகிறார்கள். அது சரி செய்த பின் மும்பை அல்லது கொச்சினுக்கு அழைத்துவரப்படுவார்கள்.

மீனவ சமுதாயம் எப்போது சிரமத்திலிருந்தாலும் அவர்களுக்கு நான் உதவியாக இருப்பேன்.

இப்போது அமைந்துள்ள மத்திய அமைச்சரவை செயல்பாடுகளை வைத்து தான் கருத்து கூற முடியும். குற்றப்பின்னணி உள்ள அமைச்சர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் தான் அதைப்பற்றி கருத்து கூற முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி அமைச்சர்கள் யாராவது இருந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதற்கு நாங்கள் போராடுவோம்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதைப்பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கூட்டணி கட்சியான தி.மு.க. வும் கூடி கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.

இந்தி திணிப்பு மட்டுமன்றி எல்லா விவகாரத்திலும் தேவையில்லாத ஒன்றை திணித்து பிறகு பின்  வாங்குவதுதான் அரசின் வேலை. இந்தியை படிக்காதே என்று காங்கிரஸ் சொல்லவில்லை. இந்தியை திணிக்காதே என்று தான் சொல்கிறோம்.

வாரிசு அரசியலை குறித்து ராகுல் காந்தி காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசியதற்கு ஆதாரம் இல்லை. சில ஊடகங்கள் தான் அவ்வாறு எழுதி வருகின்றனர்.

வயதடைந்தவர்களுக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது என்று விஜயதாரணி கூறியிருக்கிறார்கள். கட்சி என்றால் கட்சிக்கு தலைமை இருக்கும். அவர்கள் எடுக்கும் முடிவில் யாரும் கேள்வி கேட்க முடியாது. பண்பட்ட தொண்டன் யாரும் அவ்வாறு கேள்வி கேட்க வேண்டும்.

ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை குறித்த நிலைப்பாடுக்கு காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு சொல்ல வேண்டும்

எட்டுடு வழிச்சாலை திட்டத்தை சிலரே எதிர்க்கின்றனர் என்று தமிழக முதல்வர் கூறுகிறர். எதிர்ப்பு என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால் சிலரே போராட்டத்திற்கு வருவார்கள்.

குமரியில் முதல் பிரச்னையாக நான் கருதுவது வேலையில்லா திண்டாட்டம்தான். அதனை சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு பன்னாட்டு கம்பெனிகளில் பணி அமர்த்தப்படுவார்கள். தேர்ச்சி பெரும் அளவுக்கு அவர்களை தயார் செய்ய உள்ளோம்.

கட்சிக்காக பணியாற்றி, சிறை சென்று பல இன்னல்களை சந்தித்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் வாரிசாக இருந்தால் அது வாரிசு அசியல் ஆகிவிடாது. அவர்கள் லண்டனிலிருந்து கொண்டுவரப்படவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சிக்காக அத்தனை பணிகளை ஆற்றியுள்ளார். அதனால் தலைவராகியுள்ளார். என் மகன் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அவர் அரசியலுக்கு வர இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் ஆகலாம்.

அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியிலிருப்பதால் சபாநயகர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையலாம்.
அவர்கள் பணபலம், படைபலம் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிப்பார்கள்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.