ETV Bharat / state

அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்திடம் மீண்டும் விசாரணை! - DMK MP KATHIR ANAND

பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி கதிர் ஆனந்த்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முந்தைய முறை விசாரணைக்கு ஆஜராக வந்த திமுக எம்பி கதிர் ஆனந்த் (கோப்புப்படம்)
முந்தைய முறை விசாரணைக்கு ஆஜராக வந்த திமுக எம்பி கதிர் ஆனந்த் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 5:44 PM IST

சென்னை: 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 14 கோடி ரூபாய் பணம் குறித்து அமலாக்கதுறை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக திமுக எம்பி கதிர் ஆனந்திடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, திமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி மற்றும் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காட்பாடி போலீசில் வழக்குப்பதிவு செய்து வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் கடந்த 2ம் தேதி முதல் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரிடம் விசாரணை நடத்த தடை!

அந்த சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 22 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. அதன்பேரில், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜரானர். அன்று காலை 10.30 மணி முதல் துவங்கிய விசாரணை சுமார் 10 மணி நேரமாக நடைபெற்றது.

இந்த நிலையில, இன்று (ஜன.28) மீண்டும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.