குமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் ஒரு சமுதாய மக்கள் அதிகமாகவும், மற்றொரு சமுதாய மக்கள் குறைவாகவும் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் 2008ஆம் ஆண்டின்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைவுவாயில் கட்டுவதில் இவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் கலவரமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் கட்டுப்படுத்தினர். தேவாலய நுழைவு வாயில் கட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தேவாலயம் நுழைவாயில் கட்டுவதற்கு சாதகமாகத் தீர்ப்புகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டும் பணிகள் தொடங்கின. இதற்கிடையில் ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிரடி படை காவலர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டக்காரர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?