கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்துள்ள திருமன்னா பகுதியைச் சேர்ந்தவர் கெயில்சன். இவரது மனைவி மேரிஜெயா. இவர் நேற்று மாலை 6 மணியளவில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார்.
அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள் மேரிஜெயாவின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் மேரிஜெயா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வானத்தில் மேரிஜெயாவை பின்தொடர்ந்து வந்து அவரின் கழுத்தில் இருந்த செயினை பறித்ததது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கொல்லங்கோடு காவல் துறையினர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடி காட்சி வெளியீடு!