குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் பாலகிருஷ்ணன் என்பவர் மகன் சந்தோஷ் (12) அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்றுபண்டிகை விடுமுறை என்பதால் சந்தோஷ், அவனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றி வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றான்.
சந்தோஷ் நண்பர்களுடன் தண்ணீரில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் ஆழமான பகுதிக்குச் சென்று மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவனது நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல், தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சந்தோஷ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி’ நாயகியின் ரீ-என்ட்ரி