தேசிய புலனாய்வு முகமை கர்நாடகம், கேரள மேலப்பாளையம், கன்னியாகுமரி திருவிதாங்கோடு உள்பட பல இடங்களில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களை மிரட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, தன்னை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்த பயங்கரவாதிகள் தற்போது துப்பாக்கியை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.
இதையும் படிங்க: குமரி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி - வாகனச் சோதனை தீவிரம்!