ETV Bharat / state

பதைபதைக்கும் சிசிடிவி.. கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி விபத்து.. - accident news

கன்னியாகுமரி அழகிய மண்டபம் அருகே கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Jan 11, 2023, 7:43 AM IST

கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பிஜூ. நர்சிங் கல்லூரி மாணவரான இவர் தனக்கு சொந்தமான வேகனார் காரில் தனது பெண் நண்பருடன் திங்கள்சந்தை பகுதியில் இருந்து அழகியமண்டபம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதிவேகத்தில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே சாலையின் ஓரமாக சோனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அதன்பின் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த எட்வின் வசந்த் என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சோனி படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின்போது பதிவான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியது.

இதையும் படிங்க: வெளியானது துணிவு - வாரிசு: திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.