கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் லாரியை கயிற்றால் தனது உடம்பில் கட்டி 25 மீட்டர் தூரம் வரை இழுத்து மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக லாரியை கயிற்றில் கட்டி இருப்பவர்கள் முதுகுப்பகுதியில் இருபுறமும் கயிற்றை கட்டி இழுப்பதுதான் வழக்கம். ஆனால், கண்ணன் வயிற்றை கயிரால் கட்டி இடுப்பில் சுற்றி அதனை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
உலக அளவில் இதுபோன்று வேறு யாரும் இந்தச் சாதனையை செய்தது கிடையாது. இன்று அவர் 9.5 டன் எடையுள்ள லாரியை கால் சக்தி கொண்டு 90 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இதனை சோழன் உலக புக் ஆஃப் ரெக்கார்டு நடுவர்கள் வந்து ஆய்வுசெய்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். இதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். மேலும் பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:உலக சாதனை படைத்த ’பிளாக் ஷீப்’!