குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரவீன் குமார் வியாஸ் (47) மற்றும் இவரது நண்பர் லலித் தேவர் (35). இவர்கள் இருவரும் இன்று நாகர்கோவிலை அடுத்த மேல கருப்பு கோட்டை என்ற இடத்தில், பழைய ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பிரவீன் குமார் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றதால், அவரது கால் அப்பகுதியில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் கரைக்குத் திரும்ப முடியாமல் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் லலித், தனது நண்பரைக் காப்பாற்ற தண்ணீருக்குள் வேகமாக நீந்திச் சென்றுள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் சேற்றில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தீயணைப்புப்படையினர் சம்பவ இடம் வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து கவால் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழையாற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நகைக் கடை அதிபர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயற்சித்த அவரது நண்பரும் இறந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரயில் நிலைய கள வகுப்பு