ETV Bharat / state

கைவிட்ட பிள்ளைகளை 7 வருடங்களாகத் தேடி அலையும் தம்பதி!

கன்னியாகுமரி: இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடி அலையும் நிலை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

pair
author img

By

Published : Oct 18, 2019, 12:09 AM IST

Updated : Oct 18, 2019, 10:46 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்துவந்த கணேசன்(70) என்பவரது குடும்பம் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது வீட்டை இழந்தது. பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி, குடை தைக்கும் தொழில்செய்து கணேசன் தனது குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகளும், மகனும் அவரவருக்கு பிடித்தவர்களைக் காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரை தனியாகத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். சிறிது நாட்கள் கழித்து பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல்கூட கிடைக்காமல்போனது. பின்னர், இருவரும் வீடு வீடாக குடை, செருப்பு ஆகியவை தைப்பது, ஈயம் பூசுவது போன்ற பணிகளைச் செய்து பிழைப்பு நடத்திவந்தனர். இதற்கிடையே பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் எனவும் அவர்கள் ஊர் ஊராகத் தேடிவருகின்றனர்.

எழு வருடங்களாக கைவிடப்பட்ட பிள்ளைகளைத் தேடிவரும் தம்பதி

ஆதரவின்றி ஊர் ஊராகச் சென்று நாடோடி வாழக்கை நடத்திவரும் இந்த தம்பதிக்கு, இறப்பதற்கு முன்பு ஒரு முறையாவது தங்களது மகனையும் மகளையும் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையோடு தமிழ்நாடு, கேரளா உட்பட பல இடங்களில் பல வருடங்கள் கடந்தும் தேடிவருகின்றனர்.

இதுவரை, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது தம்பதி இருவரும் கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் இரவிலும் பகலிலும் எந்தவித பாதுகாப்புமின்றி தங்கியுள்ளனர். வயது முதிர்ந்த காரணமாக வேலைக்கும் செல்ல முடியாமல், உணவுக்கு வழியுமின்றி பிறர் தரும் உணவை வாங்கி உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ’செம க்யூட்’... 19 மாதக்குழந்தை குறித்து மோடி ட்வீட்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மகன் மகளை தேடி ஊர் ஊராக சுற்றும் முதியவர் மற்றும் மூதாட்டி. நோய் வாய்ப்பட்டு போதிய உணவு உடை இன்றி நடுரோட்டில் தவிக்கும் அவலம். இறப்பதற்கு முன்னர் ஒரு முறையாவது மகன் மற்றும் மகளை பார்த்து விட வேண்டும் என்று தவிக்கும் அவலம்.Body:குமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தவர் கணேசன் (70). இவரது சிறுவயதில் ரயில்வே தண்டவாளங்கள் போட நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.
பின்னர், சரசு (66) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊர் ஊராக சென்று புறம்போக்கு நிலங்களில் தயங்கி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். பின்னாளில் இவர்களுக்கு லட்சுமி எந்த மகளும் சத்யராஜ் என்ற மகனும் பிறந்தனர்.
இந்நிலையில் அவரது ஒரே மகள் லெஷ்மி மற்றும் மகன் சத்தியராஜ் ஆகியோர் கேரளவை சேர்ந்தவர்களை காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரை தவிக்கவிட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இதனை தொடர்ந்து பிழைப்புக்காக இனையம்புத்தன்துறை , மார்த்தாண்டம் துறை உட்பட கடலோர பகுதிகளில் சென்று வீடு வீடாக குடை, செருப்பு தைப்பது, ஈயம் பூசுவது போன்ற பணிகளை செய்து வந்தனர்.
மேலும் தங்களது மகன் மற்றும் மகளை இறப்பதற்கு முன்பு ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்று தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் ஊர் ஊராகச் சென்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் தேடியுள்ளனர்.
இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் இரவிலும் பகலிலும் எந்த வித பாதுகாப்பும் இன்றி
போதிய உணவு மற்றும் உடை இன்றி தங்கியுள்ளனர்.
மேலும், நோய்வாய்ப்பட்டு காணப்படும் இவர்கள் பொதுமக்கள் யாராவது உணவு கொடுத்தால் வாங்கி உண்டு விட்டு நடுரோட்டில் தவித்து வருகின்றனர். Conclusion:
Last Updated : Oct 18, 2019, 10:46 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.