மத்திய அரசின் இளைஞர் நல விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.
இந்த முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார், "இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து குமரி முதல் காஷ்மீர் வரையில் நற்பணிகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கன்னியாகுமரி கடற்கரையை உலகத்தரத்தில் மேம்படுத்த பிரதமரிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.
பின்னர் பேசிய நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் எம்.என். நட்ராஜ், "நேரு யுவகேந்திரா சார்பில் மலையேற்றம், பாறையேற்றம், அக்குவா ஸ்போர்ட்ஸ், ரிப்லிங், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திராவின் 30 ஆயிரம் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்க: