காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவர், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, காஞ்சிபுரம் பெரியவர் மணிமண்டப தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி தினேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, மணிமண்டப நிர்வாகிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு 4 சிறப்பு ரயில்கள்! தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு