தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பல்வேறு தொழிற்சாலைகள் நிவாரண நிதி, நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் (YMIG) நிர்வாக இயக்குநர் யுகுகிகொ தடா (Yukihiko Tada) , நிர்வாகத் துணைத் தலைவர் (மனித வளம்) தகாகிரொ என்மி (Takahiro Henmi) மற்றும் நிறுவனத்தின் உள்பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (ஜூன் 2) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையாவை நேரில் சந்தித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
ரூ. 25 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும், உத்தரப்பிரதேச அரசு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், ரூ. 11.5 லட்சம் பிரதமர் பராமரிப்பு நிதிக்கும் என இதுவரை 61.5 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யமஹா இந்தியா நிறுவனம் அளித்துள்ளது.
கரோனா நிவாரண நிதி வழங்கிய யமஹா மோட்டார்!
காஞ்சிபுரம்: கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையானது, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.