ETV Bharat / state

உதயநிதி நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் - people wlfare programme

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
author img

By

Published : Jul 28, 2019, 6:15 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் திமுக இளைஞரணி மாநில செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும், மு.க ஸ்டாலின், முக்கிய கட்சிப் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று பொது மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஆயிரம் தென்னை மரக்கன்றுகள், ஆயிரம் பேருக்கு மதிய உணவு, 300 மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், மக்களுக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

”இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிகளவில் நடைபெறும். உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்பில் மென்மேலும் வளர வேண்டும். அதற்கான வாழ்த்துகளை தெரிவிக்கும் வண்ணமாக இந்நிகழ்வு அமைந்திருக்கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் எம்.பி மோகன், மாவட்ட செயலாளர் ராஜா, கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி திமுக மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற்பணி மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற திருக்கழுகுன்றம் ஒன்றிய செயலாளர் எம் பி மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்

Body:திமுக இளைஞரணி மாநில செயலாளராக புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதவியில் அமர்த்திய முக ஸ்டாலின் மற்றும் முக்கிய கட்சிப் பொறுப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது இதில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பேருக்கு மதிய உணவுகள் 300 மாணவ மாணவிகளுக்கு பாடம் புத்தகங்கள் மற்றும் ஏழை எளிய பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன இதனையடுத்து இதுமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த 5 வருடங்களாக செய்து கொண்டு வருவதாகும் அதன் தொடர்ச்சியாக இது நடைபெறுவதாகும் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் தெரிவித்தனர் இதனையடுத்து நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் யுவராஜ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்

Conclusion:உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்னும் மென்மேலும் சிறப்பாக நடைபெறும் என்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மென்மேலும் வளர வேண்டும் என்றும் அதற்கான வாழ்த்துக்கள் தெரிவித்து வண்ணமாக இந்நிகழ்வு அமைந்திருக்கும் எனவும் மாவட்ட செயலாளர் யுவராஜ் அவர்கள் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.