உலகப் பிரசித்திப்பெற்ற கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிக விமரிசையாக தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று சந்திரபிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் கோயிலில் இருந்து காந்தி சாலை நான்கு ராஜ வீதி சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முக்கிய திருவிழாவான வரும் வியாழக்கிழமையன்று பிரசித்திப்பெற்ற 85 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.