காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம் கடைசி நாளான நேற்று (மார்ச்8) புஷ்ப பல்லக்கு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் சங்கத் தலைவரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவருமான ஜான்பாண்டியன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், ’தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் இனத்தின் 7 பிரிவுகளை உள்ளடக்கி அரசாணை பதிவுசெய்து வழங்கியுள்ளது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எங்களுக்கு தேவையான ஐந்து தொகுதிகளை கொடுக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.
இதையும் படிங்க:கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!