ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகையை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை 108 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோலின் விலை இந்தியாவில் ரூ.70. தற்போது கச்சா எண்ணெய் பேரல் விலை 54 டாலர் மட்டுமே. ஆனால், நூறு ரூபாயை நெருங்குகிறது பெட்ரோல் டீசல் விலை.
ஸ்டாலின் தனது உழைப்பால் இன்று முதலமைச்சர் வேட்பாளர் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமி போல ஊர்ந்தோ தவழ்ந்தோ இந்த இடத்தை அடையவில்லை. அதனால், ஸ்டாலினுக்கு மக்கள் தயங்காமல் முதலமைச்சர் பதவியை தரலாம். அவர் வந்த பிறகு விலைவாசியை குறைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளோடு கதிரடித்து வாக்கு சேகரித்த அமைச்சர் உதயகுமார்