உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு தங்கத் தேர் வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளருமான வி. சோமசுந்தரம் வழிபட்டார்.
கரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக முடங்கியிருந்த பொதுமக்கள், இந்தத் தேர் வீதியுலாவில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்