ETV Bharat / state

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டுபிடிப்பு! - செயல் அலுவலர்

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில், கோயில் ஆவணங்களில் வராத 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உற்சவர் சிலைகள் கண்டுபிடிப்பு
உற்சவர் சிலைகள் கண்டுபிடிப்பு
author img

By

Published : Jun 19, 2021, 7:55 PM IST

காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில், பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலம் சார்ந்த ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கோயில் சார்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பொருள்கள் மாயம்

குறிப்பாக சில மாதங்களுக்கு முன் வெள்ளிப் பல்லக்கின் வெள்ளி காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல, இரட்டை திருமாளிகை , திருவாச்சி மாயம் போன்ற புகார்களால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், அடிக்கடி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 உற்சவர் சிலைகள்

ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் கோயில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில், கோயில் பொக்கிஷ அறையில் விநாயகர், லட்சுமி , 9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் நடத்திய ஆய்வில் இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்திற்குள் இருக்கும் பொக்கிஷ அறையில் சுவாமி சிலைகள் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள், பூஜைக்குரிய பஞ்சபாத்திரம் போன்ற பொருட்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த உற்சவர் சிலைகள் எவ்வளவு காலமாக அந்த அறையில் இருக்கிறன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் உற்சவர் சிலைகள் கண்டுபிடிப்பு

உற்சவர்களை பயன்படுத்தாதது ஏன்?

இவ்வளவு காலமாக ஏன் அந்த உற்சவர் சிலைகள் பயன்படுத்தப்படாமல் பொக்கிஷ அறைகள் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன என்ற கேள்வியும் தற்போது பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சிலைகள் குறித்த தகவல்கள் கோவில் ஆவணங்களில் இதுவரை குறிப்பிடப்படாமல் உள்ளன. தற்போது பொக்கிஷ அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 சிலைகள் என்ன மாதிரியான உலோகத்தால் செய்யப்பட்டது என்பது குறித்தும் தெரியவில்லை.

பக்தர்கள் கோரிக்கை

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து முறையாக ஆவணம் இல்லாததால், இந்த சிலைகள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பக்தர்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்பதே தற்போது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவிக்கையில், "கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்த பின்னர் தான் அவை எந்த உலோகத்தால் செய்யப்பட்டுள்ளன என்பது கண்டுபிடிக்கப்படும். தற்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆய்வு செய்வதில் காலதாமதம் இருந்து வருகிறது" என்றார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அடிக்கடி விசாரணை செய்து பல தகவல்களை வெளிக்கொண்டு வரும் நிலையில், தற்போது ஆவணங்களில் வராத 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவே போக்குங்கள்' - சங்கரமட சுவாமிக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.