இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் நேற்று (மார்ச் 13) தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து ஆரணிக்கு நோக்கிச் செல்வதற்காக மினி லாரி சென்றது.
அந்த மினி லாரியை அலுவலர்கள் சோதனை செய்தபோது, மினி லாரியில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்ததையடுத்து அதற்கான ஆவணத்தை காட்டும்படி ஓட்டுநரிடம் அலுவர்கள் கேட்டபோது, அதற்கான ஆவணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 மூட்டைகளில் இருந்த மூன்று டன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல்செய்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.