காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட முக்கிய வீதியான மடம் தெரு பகுதியில் சிமெண்ட் சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி சாலையில் கடந்த ஒரு வார காலமாக வழிந்தோடுகிறது.
சாலையில் குடி நீர் வெளியேறி வீணாகிவருவது குறித்து அப்பகுதி மக்கள் பெருநகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அளித்து ஒரு வார காலம் ஆகியும் பெருநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. நாள்தோறும் தொடர்ந்து சாலையில் குடிநீர் வெளியேறிவருவதால் அப்பகுதியில் வாகனத்திலும், நடந்தும் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
மேலும் சாலைகளில் தேங்கும் நீர் கழிவுநீர்போல் மாறி மீண்டும் குடிநீர் குழாய்கள் சென்றால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் பெருநகராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாயைச் சீர்செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கழிவுநீரோடு வாழ்ந்துவரும் கோயில் கற்தூண்கள்!