ETV Bharat / state

'சென்னை மக்களை நேசிக்கிறேன்..!' - பிராவோ - மாங்காடு

திருவள்ளூர்: "சென்னையில் வசிக்கும் மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்" என்று, கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோ தெரிவித்தார்.

வெய்ன் பிராவோ
author img

By

Published : Jul 2, 2019, 8:18 PM IST

மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான வெய்ன் பிராவோ கலந்து கொண்டார்.

அவருக்கு பள்ளியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை பிராவோ வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "சென்னையில் வசிக்கும் மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் உடலையும், மனதையும் நாம் சரியாக பாதுகாத்து கொள்ள தினந்தோறும் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்", என்றார்.

வெய்ன் பிராவோ

இறுதியில் பிராவோ முன்னிலையில் மாணவர்கள் நடனமாடி அசத்தி அவரை வழியனுப்பினர்.

Intro:மாங்காட்டில் தனியார் பள்ளியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிகெட் வீரர் வெயின் பிராவோ பங்கேற்பு.
Body:மாங்காட்டுல் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேற்கிந்திய கிரிகெட் அணியின் நட்சத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான வெயின் பிராவோ கலந்து கொண்டார். அவருக்கு பள்ளியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது பின்னர் பள்ளியில் கூடைபந்து, கால்பந்து, கிரிகெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வெயின் பிராவோ வழங்கினார்.
Conclusion:அப்போது பேசிய அவர்

சென்னையில் வசிக்கும் மக்களை நான் மிகவும் நேசிப்பதாகவும், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரை நாம் மதித்து நடக்க வேண்டும், நம்முடைய வாழ்வில் உடலையும், மனதையும் நாம் சரியாக பாதுகாத்து கொள்ள தினந்தோறும் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் பிராவோ முன்பு மாணவர்கள் நடனமாடி அசத்தினார்கள். இதனை ஆழ்ந்து கவனித்துக்கொண்டிந்தபோது திடீரென பட்டாசு வெடித்ததால் பிராவோ சற்று பயந்தபடி சிரித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.