ETV Bharat / state

நூறு விழுக்காடு வாக்குப்பதிவை முன்வைத்து விழிப்புணர்வு மாரத்தான்! - marathon

காஞ்சிபுரம்: நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மினி மாரத்தான்
author img

By

Published : Apr 7, 2019, 10:11 AM IST

மக்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நிறைவேற்றும் வகையில் பல்வேறு முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு, மினி மாரத்தான் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தானில், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா, தேர்தல் அலுவலர்கள் ஸ்ரீதர், மோகன் பாபு உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மாரத்தானில் இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் பங்கேற்று, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் அளித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் போட்டியின்போது, காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம், மருத்துவர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்களும் குடிநீர், குளிர்பானங்களை வழி நெடுகிலும் வழங்கிவந்தன.

இந்த மாரத்தான் போட்டியின் இறுதியில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இதன் நிறைவு விழா நடத்தப்பட்டு, மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
17 வது மக்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது காலை 6 மணிக்கு துவங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாவட்ட ஊராட்சி முகமை அலுவலர் ஸ்ரீதர் உதவி திட்ட அலுவலர் மோகன் பாபு, எழிலரசன்உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பங்கேற்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் இளம் வயது சிறுவர் முதல் முதியவர் வரை ஆர்வமுடன் பங்கேற்று விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் அளித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதன் நிறைவாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம் மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் குளிர்பானம் வழி நெடுகிலும் வழங்கி ஏற்பாடு செய்தது...

Visual in ftp 

TN_KPM_1_7_MARANTHAN_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.