காஞ்சிபுரம் மாவட்டம், இடையம்புதூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் விரக்தியடைந்த அப்பகுதிப் பெண்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.