ETV Bharat / state

பாங்கோசை கேட்டு பரப்புரையை நிறுத்திய முதலமைச்சர்: தொழுகை முடியும் வரை காத்திருப்பு! - காஞ்சிபுரம் அண்மை செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காஞ்சியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, மசூதியில் இருந்து பாங்கு ஓசைக் கேட்டதும், தனது பரப்புரையை நிறுத்தி விட்டு, தொழுகை முடியும் வரை காத்திருந்து பின்னர் மீண்டும் பரப்புரையில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பாங்கோசை கேட்டு பரப்புரையை நிறுத்திய முதலமைச்சர்

author img

By

Published : Jan 20, 2021, 10:30 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

காந்தி ரோடு, தேரடி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தபோது, அருகிலிருந்த மசூதியில் தொழுகை நடைபெற்றது. அப்போது கேட்ட பாங்கு ஒசையைக் கேட்ட உடனேயே தனது பரப்புரையை நிறுத்திவிட்டு, தொழுகை முடியும் வரை காத்திருந்தார்.

பாங்கோசை கேட்டு பரப்புரையை நிறுத்திய முதலமைச்சர்

தொழுகை முடிந்ததும், மீண்டும் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது மதமும், ஜாதியும் இல்லாத கட்சி அதிமுக என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுகதான் எனப் பேசினார். முதலமைச்சரின் இந்தச் செயலை கண்டு அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், விசில் அடித்தும், கரகோசங்களை எழுப்பியும், கைகளை தட்டி முதலமைச்சரை பாராட்டினர்.

இதையும் படிங்க: சசிகலாவை கட்சியில் இணைக்க மறுக்கும் எடப்பாடி... சூடுபிடித்துள்ள தமிழ்நாடு தேர்தல்களம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.