காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சட்ட பணிகள் குழு மற்றும் காவல் துறை சார்பில் இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமால் உள்ளிட்ட நீதிபதிகளும், போக்குவரத்து வட்டார ஆய்வாளர் சக்திவேல் , மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சார்பு நீதிமன்ற நீதிபதி சரிதா தொடங்கிவைத்த இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.