காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் என 48 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டது. அப்போது தரிசனம் பெறாத பக்தர்கள் தற்போது அனந்தசரஸ் குளத்தை பார்த்தபடி அத்திவரதரை வணங்கி வருகின்றனர்.
தினம்தோறும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அனந்தசரஸ் குளத்திலுள்ள அத்திவரதரை குளத்தின் வெளியே இருந்து பார்த்து தரிசித்த பின், மூலவர் தேவராஜனை தரிசித்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் குளத்தின் உள்ளே செல்லாதபடி காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் மட்டுமே குளம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: