காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையிலிருந்து தேர்தல் அலுவலர்கள் உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக ஆங்காங்கே தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மானாம்பதி கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வந்தவாசியிலிருந்து பெருநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரப் அலி (46) என்பவரது காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 706 கிராம் பழைய மற்றும் புதிய நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வந்தவாசியை சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் என்றும், சென்னைக்கு வியாபார ரீதியாக சென்றதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்