ETV Bharat / state

அனந்தசரஸ் குளத்தில் மத்திய நீர்வள துறையினர் திடீர் ஆய்வு!

காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை அரிய மத்திய நீர்வள துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

அனந்த சரஸ் குளம்
அனந்த சரஸ் குளம்
author img

By

Published : Sep 10, 2020, 3:47 PM IST

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்தி வரதரை ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. இதில், உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி அன்று மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அந்த குளத்துக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் பின் குளத்தின் தன்மையை பாதுகாக்கவும், அசுத்தம் செய்யப்படாமல் இருக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்து நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி மத்திய நீர்வளத்துறை உதவி நீர் வள ஆராய்ச்சி அலுவலர் ராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அத்தி வரதர் வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய எத்தியோப்பியர்களுக்கு சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.