ETV Bharat / state

விழா கோலம் பூண்ட காஞ்சி நகரம் - தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர்

author img

By

Published : May 15, 2022, 4:33 PM IST

அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று பிரசித்திபெற்ற கருட சேவை உற்சவத்தையொட்டி தங்க கருட வாகனத்தில்உற்சவர் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர்
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உலகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று முன் தினம் அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று (மே 15) பிரசித்திபெற்ற உற்சவமான கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு காலை கோயிலில் உள்ள வாகன அலங்கார மண்டபத்தில் மல்லி, ரோஜா உள்ளிட்டப் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீலம்,ரோஸ் வண்ண வெண்பட்டு உடுத்தி உற்சவர் வரதராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன்பின் கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் புறப்பட்ட உற்சவர் வரதராஜப் பெருமாள் ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதி வழியாக நகரின் முக்கிய வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் கடந்துசென்று, திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். வழி நெடுங்கிலும் பக்தர்கள் தேங்காய், பூ, தீபாரதனைகள் சமர்பித்தும், "கோவிந்தா கோவிந்தா" ,"காஞ்சி வரதா வரதா, அத்தி வரதா,அத்தி வரதய்யா" என பக்தி பரவசத்துடன் கரகோசங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பஜனைக்குழுவினர் பஜனைப்பாடல்களை பாடியும், இசை அமைத்து நடனமாடியும் சென்றனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர்

கருட சேவை உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து பிரசித்திபெற்ற கருட சேவை உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சிறுவர் முதல் பெண்கள் வரை அசத்திய பாரம்பரிய கும்மியாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.