ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மட்டும் 41.37 செ.மீ. மழைப்பதிவு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவில் மட்டும் 41.37 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

rain
rain
author img

By

Published : Dec 5, 2020, 7:59 AM IST

புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்துவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 04) இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில் இன்று (டிச. 05) காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 9.92 செ.மீ., உத்திரமேரூரில் 3 செ.மீ., வாலாஜாபாத்தில் 5.58 செ.மீ., குன்றத்தூரில் 8.97 செ.மீ. என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 41.37 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

சராசரியாக 6.89 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 9.92 செ.மீட்டரும், குறைந்த அளவில் உத்திரமேரூரில் 3 செ.மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

தொடர் கனமழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்றதற்காக கொலை: ஒருவர் சரண், 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.