காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் சூலை கருப்பு என்கின்ற வடிவேல் (27). இவர் மீது சிவகாஞ்சி காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்த வடிவேலை பலர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் தன் வீட்டை விட்டு வெளியில் சென்ற வடிவேலுவை மடக்கி அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவுடி வடிவேலுவின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் உயிரிழந்த ரவுடி வடிவேலுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழிப்பறி கொள்ளையர்களான செல்வம் மற்றும் சதீஸ் ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரவுடிகள் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சிறுநீர் குடிக்குமாறு வற்புறுத்தி இளைஞரைத் தாக்கிய கும்பல்!