காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனம், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கியுள்ளது.
இதனை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் அதன் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், நிறுவனத்தின் உறுப்பினர் ஸ்டீபன் சுதாகர், உதவி துணைத் தலைவர் புனித் ஆனந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினர்.
கரோனா காலத்தில் பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் ஹூண்டாய் நிறுவனத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: Covid 19 ஆறு மாவட்டங்களில் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்