காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்ற அத்தி வரதர் வைபவ தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று இரண்டு மணியுடன் விஐபி, விவிஐபி தரிசனம் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஆடி கருட சேவையை தொடர்ந்து அதிகரித்து வந்த பக்தர்கள் கூட்டம், கடைசி நாளான இன்று அதிகளவில் வருகை தருவாவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகை குறைந்துள்ளது.
தரிசனத்தின் கடைசி நாளான இன்று ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து காட்சி அளிக்கும் அத்தி வரதரை கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் பத்கர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நாளை மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் சிலை வைக்கபடும். இதற்கு பிறகு 40ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் அத்திவரத்தரை தரிசிக்க முடியும்.
குறிப்பாக 47நாட்கள் நடந்த இந்த தரிசன வைபவத்தில் சுமார் 1கோடியே 04 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.