ETV Bharat / state

கொள்ளையடித்த வீட்டில் உரிமையாளரின் செலவுக்காக ரூ.1000: கொள்ளையனின் தயாள மனம்! - திருக்கோவிலூரில் திருட்டு

திருக்கோவிலூரில் தனியாக இருந்த நபரிடம் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 சவரன் நகை கொள்ளை
13 சவரன் நகை கொள்ளை
author img

By

Published : Dec 10, 2021, 1:15 PM IST

Updated : Dec 11, 2021, 9:45 AM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகேயுள்ள குப்பத்து மேடு கிராமத்தில் வசிப்பவர் செல்வநாதன். கடந்த இரண்டு மாதங்களாக இவர் தனியாக வீட்டில் வசித்துவருகிறார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (டிசம்பர் 9) நள்ளிரவு அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 90 ஆயிரம் ரூபாய், 13 சவரன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்த வயர்களையும் துண்டித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையனின் தயாள மனம்

கொள்ளையனின் தயாள மனம்

மேலும் கொள்ளையர்கள் செல்லும்போது, அனைத்து நகைகளையும் எடுத்துச் செல்கிறீர்களே என செல்வநாதன் கேட்டதற்கு, அவர்கள் ஒரு மோதிரம், 1000 ரூபாய் பணத்தைச் செலவிற்காகக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தடயவியல் வல்லுநர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை

Last Updated : Dec 11, 2021, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.