ETV Bharat / state

'அட...!' பாதுகாவலர்கள் சாப்பிடும் வரை காத்திருந்த புதுச்சேரி முதலமைச்சர்! - புதுச்சேரி முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி அருகே நயினார்குப்பம் கிராமத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பு விழாவில் இன்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதன்பின், மண்டபத்தில் பாதுகாவலர்கள் சாப்பிடும் வரை காத்திருந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மண்டபத்தில் பாதுகாவலர்கள் சாப்பிடும் வரை காத்திருந்த புதுச்சேரி முதலமைச்சர்

author img

By

Published : May 15, 2022, 3:57 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நயினார்குப்பம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தனியார் திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருமண மண்டபத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் அதே மண்டபத்தில் காலை உணவு அருந்தினார். அப்போது அவருடன் வந்திருந்த பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் பாதுகாவலர்கள் அடுத்தடுத்து உணவருந்த சென்றனர். ஆனால், அவர்கள் உணவருந்துவதற்கு தாமதம் ஏற்பட்டது. முதலமைச்சர் முன்னதாக உணவருந்தி விட்டு புறப்படத் தயாரானார்.

அப்போது பாதுகாவலர்கள் எங்கே என்று கேட்டபொழுது, அவர்கள் உணவு அருந்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் வரும்வரை 10 நிமிடங்கள் காத்திருந்து அவர்கள் உணவருந்திவிட்டு வந்த பின்னரே முதலமைச்சர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மண்டபத்தில் பாதுகாவலர்கள் சாப்பிடும் வரை காத்திருந்த புதுச்சேரி முதலமைச்சர்

பாதுகாவலர்கள் உணவு அருந்துவதற்காக 10 நிமிடங்களுக்கு மேல் முதலமைச்சர் காத்திருந்து, பாதுகாவலர்கள் உணவருந்திய பின்னரே அவர் காரில் புறப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியது.

இதையும் படிங்க:குடும்ப அட்டைக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.